Thursday, June 18, 2009

யாரை தான் நம்புவதோ...

என்ன தலைப்பை பார்த்தவுடன் பழைய பாடல் வரி

"யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம், அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்..."
என்ற வரிகள் ஞாபகம் வருகிறதா? தற்போழுது நம்மவர் நிலமையும் இதுவே.... என்ன? !!! தலையை சொறிய தோன்றுகின்றதா? எல்லாம் நம்ம தலையை சீ.. சீ.. தலைப்பை பற்றித்தான்.

மனம் திறந்து எழுதுவதற்கு நிறையவே மனம் உண்டு. ஆனாலும் இருக்கும் இடம், காலம், நேரம் அப்பிடி. ஆகவே மனதை அடக்கி, துறுதுறுக்கும் விரலையும் கட்டுப்படுத்த வேண்டியது முக்கியம் அல்லவா? ஏற்கனவே இது சம்பந்தம்மாக வீணாக சக மொழி நண்பர்களுடன் வாதாடி நல்ல பெயர் சம்பாதித்த சம்பவங்கள் நிறையவே உண்டு. எந்தவித பங்களிப்பு இல்லாமலே உண்மையான அந்த வாதியாக கதைத்த நிகழ்வுகளும் உண்டு. என்ன செய்வது.... முடியவில்லையே உனர்வுகளை அடக்க.....

நான் இன்னும் புதிர் போட விரும்பவில்லை. நம்ம தமிழ் இனைய தளங்களை பற்றித்தான் குறிப்பிடுகின்ரேன். உடையவன் இல்லாவிடில் ஒரு சாண் கட்டை என்பார்கள் முதியவர்கள். ஆனால் நமது விடயத்தில் 1 சாண் அல்ல முழுவதுமே கட்டையாக அல்லவா உள்ளது. தத்தமது இஸ்ரத்திற்கு எழுதுகின்ரார்கள். நாட்டில் என்ன நடகின்றது என்று புரிந்து கொள்ளவே முடியவில்லை. யார் சொல்லவதை நம்புவது, நம்பாமல் விடுவது என்று விளங்கவில்லை. எதுவரை போகும் என்று தான் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். காலம் தான் சிறந்த பதில் தர வேண்டும்.
மீண்டும் சந்திப்போம். நன்றி......